குல்பூசண் ஜதாவ் விவகாரம்: பாக். மீது இந்தியா குற்றச்சாட்டு

--

இஸ்லாமாபாத்: குல்பூசண் ஜாதவ்  பாகிஸ்தானில் எந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறித்தும் அவரது  உடல் நலம் குறித்தும் தகவல் அளிக்க அந்நாடு  மறுப்பதாக இந்தியா புகார் கூறியுள்ளது.
இந்திய கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷண் ஜாதவ். இவர் பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், அந்நாட்டின் பலுசிஸ்தானில் இவரை கைது செய்ததாகவும் பாக் தெரிவித்தது. அந்நாட்டு ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு குல்பூசணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும் அந்நாடு தெரிவித்தது.

சிறையில் அடைக்கபப்பட்டுள்ளதாக கூறப்படும் அவரை அவரது குடும்பத்தினர் உட்பட எவரும் சந்திக்க முடியாதபடி பாகிஸ்தான் நாடு தடை போடுகறது. இதையடுத்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த  11 நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஜாதவ் தண்டனைக்கு தடை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கோபால் பக்லே, “குல்பூசண் ஜாதவ் பாக்.கில் எந்த சிறையில் உள்ளார், அவரது உடல்நலம் குறித்த தகவல்களை இந்தியாவிடம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பாக். அரசு, தரப்பில் இருந்து எந்த தகவலும் இல்லை. இதேபோல  கடந்த மார்ச் மாதம் ஜதாவை பார்க்க அவரது தாயாருக்கு பாக். விசா வழங்கிடவும் மறுத்துள்ளது.   சிறையில் ஜாதவ் குறித்த மருத்துவ அறிக்கையை தருமாறு பாகிஸ்தானிடம் கேட்டதற்கும் பதில் இல்லை” என்று குற்றம்சாட்டினார்.