கான்பெரா: சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியிருப்பதால், அவரை சாஹலுக்குப் பதிலாக, முதல் டி20 போட்டியில் பயன்படுத்தலாம் என்று ஆலோசனை வழங்கியுள்ளார் சுனில் கவாஸ்கர்.

சாஹலுக்குப் பதிலாக 3வது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய குல்தீப், மொத்தம் 10 ஓவர்கள் வீசி 57 ரன்களை விட்டுக்கொடுத்ததோடு, 1 விக்கெட்டையும் கைப்பற்றினார். மிடில் ஓவர்களில் ரன்களை அவர் சிறப்பாக கட்டுப்படுத்தினார்.

இந்நிலையில் கவாஸ்கர் கூறியுள்ளதாவது, “குல்தீப்பின் செயல்பாடு இன்றையப் போட்டியில் சிறப்பாக இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் பந்து வீசியுள்ளார்.

எனவே, என்னைப் பொறுத்தவரை, இவரை, குறைந்தபட்சம் முதல் டி-20 போட்டியிலாவது பயன்படுத்த வேண்டும். அதனடிப்படையில் இவரின் திறனை சோதிக்க வேண்டும்.

ஹர்திக் பாண்டயாவால், டி-20 தொடரில் சில ஓவர்கள் பந்துவீச முடிந்தால், அது இந்தியாவிற்கு இன்னும் கூடுதல் பலமாக அமையும்” என்றுள்ளார் கவாஸ்கர்.