மருத்துவர்கள் அலட்சியத்தால் கவிஞர் குருமரகுருபரன் மரணம்: கவிஞர் மனுஷ்யபுத்திரன் வேதனை

குமரகுருபரன்
குமரகுருபரன்

விஞர் குமரகுருபரன் நேற்று அதிகாலை மாரடைப்பால் மரணமடைந்தார். இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள கவிஞர் மனுஷ்ய புத்திரன், “ஆபத்தான நிலையில் இருந்த குமரகுருபரனுக்கு சிகிச்சை அளிக்க அருகில் இருந்த மருத்துவர்கள் வரவில்லை. அதனால்தான் அவர் மரணமடைந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மனுஷ்யபுத்திரன்
மனுஷ்யபுத்திரன்

இது குறித்து அவர் எழுதியுள்ள முகநூல் பதிவில்,  “(ஊருக்குச் சென்றுவிட்டு அதிகாலை நேரத்தில் சென்னை வந்தவ கவிஞர் குமரகுருபரன்)  வீட்டுப் படிக்கட்டுகளில் ஏறும்போது மயங்கி விழுந்துவிட்டதாகவும் செய்தி அறிந்து ஒடி வந்த குமரகுருபரனின் ஆட்டோ டிரைவர் அயலில் இருந்த இரண்டு மருத்துவர்களை அணுகியதாகவும் ஆனால் இருவருமே வர மறுத்துவிட்டதாகவும் அந்த டிரைவர் கூறினார்.

பிறகு இரண்டு தெரு தள்ளியிருந்த மருத்துவமனைக்கு ஓடி ஆம்புலன்ஸ் கேட்டபோது அங்கே ஆம்புலன்ஸ் டிரைவர் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். தானே ஓட்ட முடியும் என்று சொன்னபோது அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார்கள். பிறகு ஆட்டோ டிரைவர் தன்னுடைய ஆட்டோவிலேயே ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டுவந்தபோது குமரன் இறந்துவிட்டிருந்தான்.” என்று கவிஞர் மனுஷ்யபுத்திரன்  வருத்தத்துடன் குறிப்பிட்டிருக்கிறார்.

You may have missed