ஆட்சி அமைக்க தமிழக கடவுளின் அருளை வேண்டிய குமாரசாமி தமிழகமக்களின் வாழ்வாதாரம் குறித்து கவலைப்படுவதில்லை: மு.க.ஸ்டாலின்

திருச்சி:

ர்நாடக முதல்வராக தமிழகம் வந்து, தமிழக கடவுளின் அருளை வேண்டிய குமாரசாமி, தமிழக மக்களின் வாழ்வாதாரம் குறித்து கவலைப்படவில்லை என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் திமுக பிரமுகர்களின் இல்ல திருமண விழா மற்றும் காதணி விழாக்களில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வாழ்த்தினார். ஸ்ரீரங்கம் வந்த ஸ்டாலினுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர் கள் மேளதாளத்துடன் வரவேற்பு அளித்தனர்.  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சார்பிலும் கோவில் யானை மாலை அணைவித்து  வரவேற்பு கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசிய ஸ்டாலின்,  தொடர்ந்து 7 ஆண்டுகளாக பயிர்  சாகுபடிக்கு தேவையான தண்ணீரை  ஜூன் மாதத்தில் மேட்டூரில் இருந்து திறக்க முடியாத நிலை நீடித்து வருகிறது. இதன் காரணமாக டெல்டா பாசன விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். தமிழகத்தில் தமிழக மக்களை பற்றி கவலைபடாத ஆட்சி நடைபெற்று வருகிறது என்று கூறினர்.

மேலும், காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும், அதை அமல்படுத்த இன்னும்  நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. கர்நாடக அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது. காவிரி விவகாரம் குறித்து  நாடாளு மன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறி உள்ளார் என்பதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின்,  கர்நாடகாவில் தொங்கு சட்டமன்றம் அமைந்தபோது,  ஆட்சியமைக்க தமிழ்நாட் டுக்கு வந்து  கடவுளின் அருளைக் கோரிய குமாரசாமி, தற்போது முதல்வராக பதவி ஏற்றதும்,  தமிழக மக்களின் வாழ்வாதாரம் குறித்து கவலைப்படாமல், தண்ணீர் தர  மறுப்பு தெரிவித்து வருகிறார்.  விரைவில்  தமிழ்நாட்டிற்கு விடிவுகாலம் பிறக்கும் .

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

கர்நாடக முதலமைச்சராகப் பதவியேற்பதற்கு முன்பு மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி கடந்த மாதம் 20ந்தேதி , ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

You may have missed