கர்நாடக முதல்வர் குமாரசாமி – ராகுல் காந்தி சந்திப்பு

டில்லி

ர்நாடக முதல்வர் குமாரசாமி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இன்று சந்தித்தார்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இந்த கூட்டணி கர்நாடக மாநிலத்தில் கடும் தோல்வி அடைந்தது. அதை ஒட்டி கர்நாடக மாநில பாஜக ஆட்சி அமைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.

இந்நிலையில் கர்நாடக முதல்வரும் மஜத கட்சியின் தலைவருமான குமாரசாமி இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். அப்போது இருவரும் கர்நாடக மாநிலத்தில் தற்போது உள்ள அரசியல் நிலைமை குறித்து விவாதித்துள்ளனர். அப்போது முதல்வர் கூட்டணிக்கு காங்கிரஸ் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரு கட்சிகளும் ஒத்துழைப்பு அளிப்பதால் கர்நாடகாவில் ஆட்சி அமைதியாக நடைபெறுவதாகவும் குமாரசாமி தெரிவித்துள்ளார்.  காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்யக்கூடாது என குமாரசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி