பெங்களூரு:

கர்நாடகா முதல்வராக நேற்று முன் தினம் பதவி ஏற்ற எடியூரப்பா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க குமாரசாமி உரிமை கோரியிருந்தார். இதன் அடிப்படையில் குமாரசாமிக்கு இன்று மாலை கவர்னர் அழைப்பு விடுத்தார்.

இரவு 7.15 மணியளவில் ராஜ் பவனுக்கு சென்ற குமாரசாமி கவர்னர் வஜுபாய் வாலாவை சந்தித்தார்.

கர்நாடக முதல்வராக குமாரசாமி வரும் 23ம் தேதி பிற்பகல் 12.30 மணிக்கு பதவி ஏற்பார் என்று மதசார்பற்ற ஜனதா தள தேசிய பொதுச் செயலாளர் தனிஷ் அலி தெரிவித்துள்ளார். அவர் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.