நாகர்கோவில்:

கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை நிரூபிக்கும் வகையில் பிரதமர் மோடி நெற்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்சார விளக்குகளை அனைத்து விட்டு அகல் விளக்கு ஏற்ற வலியுறுத்தி இருந்தார். அதன்படி நேற்று இரவு நாடு முழுவதும் விளக்கு ஏற்றப்பட்டன.

இதற்கு ஒருதரப்பினர் வரவேற்பும், மற்றொரு தரப்பினரும் எதிர்ப்பம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சில புள்ளிங்கோங்ககள், விளக்கு ஏத்துனா கொரோனா போயிடுமா?  பிரதமரை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தனர்.

இந்த வீடியோ வாட்ஸ்அப்பில் வெளியாகி அந்த மாவட்டம் முழுவதும் வைரலானது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளப்பியது. பலர் காவல்துறையினர் புகார் அளித்தனர். இதையடுத்து, அந்த வீடியோ வெளியிட்ட  கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த 5  புள்ளிங்கோக்களையும் காவல்துறையினர் இன்று கைது செய்தனர். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.