கும்பகோணம் திருக்கோயில்கள் கரு முதல் – சதாபிஷேகம் வரை

கும்பகோணம் அருகில் உள்ள திருக்கோவில்கள் கர்ப்பம் தரிப்பது முதல் சதாபிஷேகம் வரை அனைத்துக்குமாக உள்ளது.  அவை குறித்து இங்கு காண்போம்

  1. கரு உருவாக (புத்திர பாக்கியம்) –   கருவளர்ச்சேரி
  1. கரு பாதுகாத்துசுகப்பிரசவம் பெற  –  திருக்கருகாவூர்
  1. நோயற்ற வாழ்வு பெறுவதற்கு –  வைத்தீஸ்வரன் கோயில்
  1. ஞானம் பெற – சுவாமிமலை
  1. கல்வி, கலைகள் வளர்ச்சிக்கு –  கூத்தனூர்
  1. எடுத்த காரியம் வெற்றி பெற மன தைரியம் கிட்ட – பட்டீஸ்வரம்
  1. உயர் பதவி அடைய (வேலை வேண்டி) – கும்பகோணம் பிரம்மன் கோயில்
  1. செல்வம், பெறுவதற்கு – ஒப்பிலியப்பன் கோயில்
  1. கடன் நிவர்த்தி பெற – திருச்சேறை சரபரமேஸ்வரர்
  1. இழந்த செல்வத்தை மீண்டும் பெற –  திருவிடைமருதூர் – மகாலிங்க சுவாமி
  1. பெண்கள்நற்சமயத்தில்ருது ஆவதற்கும், ருது பிரச்சனைகள் தீரவும் –  கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில் – நவ கன்னிகை
  1. திருமணதடைகள் நீங்க – திருமணஞ்சேரி
  1. நல்ல கணவனை அடைய –  கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் – மங்களாம்பிகை
  1. ஆதர்சனதம்பதி (கணவன் மனைவி ஒற்றுமை)  –  திருச்சத்திமுற்றம்
  1. பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர – திருவலஞ்சுழி
  1. பில்லி, சூனியம் செய்வினை கோளாறுகள் நீங்க – அய்யாவாடி  ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி
  1. கோர்ட்டு, வழக்குகளில் நியாய வெற்றி அடைய –  திருபுவனம் சரபேஸ்வரர்
  1. பாவங்கள் அகல –  கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடல்
  1. எம பயம்நீங்க – குளத்தில் நீராடல் ஸ்ரீ வாஞ்சியம்
  1. ஆயுள் பெற – திருக்கடையூர்