உ.பி. கும்பமேளா: 12 கோடி பக்தர்கள் கலந்துகொள்ளும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

பிரக்யராஜ்:

உ.பி. மாநிலத்தில் பிரக்யராஜ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட அலகாபாத்தில் கும்ப மேளா சிறப்பாக தொடங்கி உள்ளது. மார்ச் 12ந்தேதி வரை நடைபெற்ற உள்ள இந்த கும்பமேளாவுக்கு உலகம் முழுவதும் இருந்து சுமார் 12 கோடி பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படு கிறது.

கும்பமேளாவையொட்டி புனித நீராட உலகம் முழுவதும் இருந்து சாமியார்கள், மாடாதிபதிகள் கலந்து கொள்ள உ.பி.யை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். கும்ப மேளா நடைபெறும் பகுதியானது 4 நகரங்களின் பரப்பளவை விட அதிகமான அளவில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

மகர சங்கராந்தியான நேற்று உத்தர பிரதேச மாநிலத்தில் கங்கை, யமுனா மற்றும் சரஸ்வதி ஒன்றாகும் திரிவேணி சங்கத்தில் கும்பமேளா விழா தொடங்கியது. இதையடுத்து ஆயிரக்கணக் கான பக்தர்கள் புனித நீராடினர்.

இந்த ஆண்டு  கும்பமேளாவுக்காக மாநில மற்றும் மத்தியஅரசுகள் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 32ஆயிரம் ஸ்கொயர் கிலோ மீட்டர் அளவுக்கு பாதுகாப்பு, மருத்துவம் உள்பட  அனைத்து விதமான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2013ம் ஆண்டைய கும்ப மேளாவைவிட 4 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.

இந்த பணிகிளில் உ.பி. மாநிலஅரசின் 15 அரசுத் துறைகள், 28 மத்திய அரசுத் துறைகள் மற்றும் 6 மத்திய அமைச்சகத் துறைகள் களத்தில் இறங்கி பணிகளில் ஈடுபட்டு உள்ளது. ஆயிரக்கணக்கான அரசு அதிகாரிகள் இதற்கான பணிகளில் பிரத்தேகமாக ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கும்பமேளா விழாவை சுமூகமாக நடத்திடும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல  விழா நடக்கும் இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

உலகின் மிக அதிகமாக யாத்ரீகர்கள் கூடும் விழாவான கும்பமேளாவில் இந்த ஆண்டு 12 கோடி பேருக்கு மேல் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதா, கும்ப் நகரிப் பகுதியில் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்களில் பயணம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விழா நடக்கும் இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. போன்டூன் பாலம் மார்க்கமாக சென்றுதான் மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் நீராட முடியும். அந்தப் பாலத்தி லும் பாதுகாப்புப் படையினர்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

கும்பமேளா வசதிகள் விவரம்: 

பாதுகாப்பு பணி

கும்பமேளா பகுதியில் 12 ஆயிரம்  காவல்துறையினர் மற்றும் 8ஆயிரம் ஹோம் கார்ட்ஸ் உடன், உ.பி. மாநில  ஆயுதப்பைட காவல்துறையினரின்  10 கம்பெனிகள்  மற்றும், சென்ட்ரல் பாரா மிலிட்டரி (சிபிஎம்எப்) 34 கம்பெனியினர்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் 137 உயர் கோபுர பாதுகாப்பு, விழாவில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் வகையில் 71 கிரேன்கள்,  20 குழுக்கள் மற்றும்  58 வாகன சோதனை பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

கும்பமேளாவுக்காக கங்கையில்  22 தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கும்பமேளாவை ஒட்டி 5 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

95 வாகன நிறுத்தங்களுடன் 18 சேட்டிலைட் பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 5லட்சத்துக்கு 63ஆயிரம் வாகனங்கள் நிறுத்தலாம். இதற்காக12 ஆயிரம் எக்டேர் அளவி லான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கும்பளோவில் கலந்துகொள்ளும் பக்தர்களின் மருத்துவ 210 மருத்துவர்கள், 150 சிறப்பு மருத்து வர்கள், 15 பல் மருத்துவர்கள் மற்றும்  1757 மருத்துவ பணியாளர்கள் உள்பட  2,132 பேர்  நியமிக்கப் பட்டு உள்ளனர்.

100 படுக்கை வசதிகளை கொண்ட மருத்துவமனையை மத்தியஅரசு அமைத்துள்ளது. அத்துடன் பல்வேறு துறை சார்பில், 11 மருத்துவ மனை 25 மருத்துவ முதலுதவி குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

மேலும் 11 ஆயிரம் சானிடரி பணியாளர்கள்,1லட்சத்துக்கு 22ஆயிரத்து 500 கழிப்பிட பணியாளர் களும் அமர்த்தப்பட்டு உள்ளனர்.

மேலும் கும்பமேளாவுக்கு வரும் பக்தர்கள், மடாதிபதிகள், சாமியார்கள் 5 லட்சம் முதல் 3 கோடி பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக தங்கும் வசதிகளும் தற்காலிகமாக கும்ப் பகுதியில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், கும்பமேளாவுக்கென்றே அமைக்கப்பட்டுள்ள  பிரத்யேக வானிலை அறிவிப்பு மையங்களை நேற்று தொடங்கி வைத்தார். இந்த மையங்கள் அடுத்த 3 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து பக்தர்களுக்குத் தகவல் கொடுக்கும். ‘கும்ப மேளா வானிலை சேவை’ என்ற மொபைல் செயலியும் இந்த முறை உருவாக்கப்பட்டு, பக்தர்களுக்கு வானிலை குறித்தான அப்டேட்ஸ்களை வழங்கி வருகிறது.