காதலியைக் கரம்பிடிக்கும் காமெடி நடிகர் அஷ்வின்….!

லட்சுமி மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதனின் மகன் அஸ்வின் ராஜா.

கும்கியில் தம்பி ராமையாவுடன் நகைச்சுவைக் கூட்டணி அமைத்து அசத்தியிருந்த அஷ்வின் அந்தப் படத்துக்கு பின்னர் கும்கி அஷ்வின் என பெயர் மாற்றம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இவருக்கும் சென்னை கே.கே.நகரை சேர்ந்த ராஜசேகரின் மகள் வித்யாஸ்ரீக்கும் காதல் மலர்ந்து தற்போது திருமணத்தில் முடிவடைந்திருக்கிறது.

சென்னை சூளைமேட்டில் உள்ள அஷ்வின் வீட்டில் வரும் 24-ம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது.