மதுரை:

குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கிய மலையேற்ற குழுவினர் 10 பேர் ஏற்கனவே பலியான நிலையில், மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

தேனி மாவட்டம போடி அருகே உள்ள குரங்கிணி  கொழுக்குமலை வனப்பகுதியில், மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள்,  காட்டுத்தீயில் சிக்கினர். இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் பலியாகி உள்ளனர். இதன் காரணமாக பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

தீ விபத்தில் சிக்கி காயத்துடன் மீட்கப்பட்ட 15 பேரில், 12 பேர், மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனை, அப்போலோ, மீனாட்சி மிஷன், கிரேஸ் கென்னட் ஆகிய தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மேலும் 3 பேர் கோவை, ஈரோடு, சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படு கிறது.

இந்நிலையில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோட்டை சேர்ந்த புதுமணப் பெணணான  திவ்யா சிகிச்சை  பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இதனால் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

திவ்யாவின்  கணவர் விவேக் நேற்று உயிரிழந்துள்ள நிலையில், திவ்யா இன்று உயிரிழந்தார்.

விவேக் – திவ்யா குறித்த செய்திக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்….

குரங்கணி காட்டுத்தீ: ஈரோட்டை சேர்ந்த புதுமண தம்பதி சிக்கிய கொடுமை