‘குரங்கு பொம்மை’ தமிழ் படத்திற்கு சர்வதேச திரைப்பட விருது

புதுமுக இயக்குனர் நித்திலனின் இயக்கத்தில் வெளியான குரங்கு பொம்மைக்கும், அதில் நடித்துள்ள இயக்குனர் பாரதிஜாவுக்கும் சர்வதேச திரைப்பட விருது கிடைத்துள்ளது.

டிகர்கள் பாரதிராஜா, விதார்த், தேனப்பன்,டெல்னா டேவிஸ்,கல்கி  ஆகியோர் நடித்துள்ள குரங்கு பொம்மை படத்தை நித்திலன் இயக்கி உள்ளார்.

இந்த படத்தில், அளவுக்கு அதிகமாக ஆசைப்படும் மனிதனுக்கு அதனால் நேரக்கூடிய தீங்குகள் குறித்தும், . நகரத்தின் கோர கரங்களில் சிக்கி பலியாகும் ஒரு தந்தையின் கதை குறித்தும்  விளக்கப்பட்டுள்ளது.

இநத படத்திற்கு  தர்போது சர்வதேச விருது கிடைத்து உள்ளது. அந்த படத்தில் நடித்துள்ள இயக்குனர் பாரதிராஜா சிறந்த துணை நடிகராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கனடாவில் உள்ள புளூ சபையர் என்ற பொழுதுபோக்கு சங்கம்  டொராண்டோவில் வருடந்தோறும்  தெற்காசிய திரைப்பட விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருதுக்கு தமிழ் படங்கள் “விக்ரம்வேதா, அருவி, அறம், குரங்கு பொம்மை” ஆகிய படங்கள் அனுப்பப்பட்டிருந்தன.

இந்த படங்கள் குறித்து ஆன்லைன் மூலம் வாக்கெடுப்பது நடத்தப்பட்டு வந்தது. அதில் வெற்றி பெற்ற படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதில் “குரங்கு பொம்மை” சிறந்த தமிழ் படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடித்துள்ள  இயக்குனர் பாரதிராஜா சிறந்த துணை நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவலை  சபையர் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அஜீஷ் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

புதுமுக இயக்குநர் நித்திலன் தனது முதல் படத்திலேயே ஆழமான சமூக சிந்தனையை நிலைநாட்டியதன் மூலம் தமிழ்சினிமாவை காக்கும் இயக்குனர்களின் பட்டியலில் இடம்பிடித்து விட்டார். இதன் காரணமாக தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்  குரங்குபொம்மை  இயக்குனர் நித்திலனை  நிமிர்ந்து பார்க்க தொடங்கி உள்ளனர்.