ங்காரா

குர்து போராளிகள் துருக்கி ராணுவத் தாக்குதலில் இருந்து தப்பிக்க சிரியா அரசுடன் ஒப்பந்தம் இட்டுள்ளனர்.

துருக்கி நகர எல்லையில் குர்து இன மக்கள் வசித்து வருகின்றனர்.   இவர்கள் தனி நாடு கேட்டுப் போராடி வருகின்றனர். சிரியாவில் ஐ எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடும் அமெரிக்க வீரர்கள் குர்து மக்களுக்கு ஆதரவாக இருந்தனர்.  இதனால் துருக்கியால் இவர்களை ஒன்றும் செய்ய இயலாத நிலை இருந்தது.  தற்போது சிரியாவில்  போராளிகள் ஒடுக்கப்பட்டுவிட்டதால் அமெரிக்கா தனது படையினரைத் திரும்ப அழைத்துள்ளது.

இதைப் பயன்படுத்திக் கொண்டு துருக்கி அதிபர் டயீப் எர்டோகன் குர்துக்கள் மீது ராணுவத் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.  இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் மரணம் அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.  லட்சக் கணக்கானோர் தங்கள் இருப்பிடத்தை விட்டு ஓடி விட்டனர்.  இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க குர்துக்கள் சிரியா அரசின் உதவியை நாடி உள்ளனர்.

சிரியா அரசுடன் செய்துக் கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி குர்துக்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மன்பீஜ் மற்றும் கோபேன் ஆகிய நகரங்களை சிரியாவிடம் ஒப்படைக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.  அதற்குப் பதிலாக எல்லைப்பகுதிக்கு தங்கள் படைகளை அனுப்பி துருக்கி ராணுவத்தின் மீது எதிர்த் தாக்குதல் நடத்த சிரியா அரசு ஒப்புக் கொண்டுள்ளது.