ஆரி பேசினதை அப்படியே ‘ட்விஸ்ட்’ பண்ணின அர்ச்சனா…..!

நேற்று பிக்பாஸ் வீட்டில் பொங்கல், சப்பாத்தி என சாப்பாட்டு அயிட்டங்களை வைத்து அடுத்த சண்டையை ஆரம்பித்தனர். மீண்டும் ஆரி-அர்ச்சனா இடையே உக்கிரமான சண்டை எழுந்தது. கடந்த வாரம் அமைதியாக இருந்த ஆரி இந்த வாரம் அப்படி இல்லாமல் வச்சு செய்து விட்டார்.

வீட்டுக்கு வெளியில் அனிதாவுடன் கைகோர்த்து முஸ்தபா முஸ்தபா பாடும் சனம் வீட்டுக்கு உள்ளே அவரை நாமினேட் செய்து வச்சு செய்கிறார்.

கிச்சனில் சாப்பாடு பரிமாறிய ஆரி, ஆஜீத் தட்டில் கொஞ்சம் பொங்கல் வைத்து விட்டு இன்னும் கொஞ்சம் வைக்கட்டா? என்பது போல கேட்டார். பதிலுக்கு அருகில் இருந்த சோம் வச்சு விடுப்பா என்பது போல சொல்ல ஆரி இன்னும் கொஞ்சம் பொங்கலை அவரது தட்டில் வைத்தார். ஆரி பரிமாறியதை கவனித்தும் கூட அர்ச்சனா அருகில் வந்து தானே பரிமாற ஆரம்பித்தார்.ஆஜீத் எவ்வளவு சாப்பிடுகிறான் என்பதை ஆரி கணக்கெடுப்பதாக மாற்றி சொல்லி விட்டார் அர்ச்சனா .

இந்நிலையில் இன்றைய புரோமோவில் சுமங்கலி பிரச்சனையை பற்றி பேச ஆரம்பித்த கமல்ஹாசன் அனிதாவை இருகரம் தட்டி பாராட்டியுள்ளார். வேறு எங்கே இதைப் பற்றி பேசுவது என்று அனிதாவின் பேச்சை அவர் பாராட்டியதால் போட்டியாளர்கள் நிச்சயம் ஷாக்காகி இருப்பார்கள். எதுவாயிருந்தாலும் இன்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.