அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’ ஃபர்ஸ்ட் லுக்…!

‘8 தோட்டாக்கள்’ படம் மூலம் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய இயக்குநர் ஸ்ரீகணேஷ்.இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் ’குருதி ஆட்டம்’.

இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ராக் போர்ட் என்டெர்டைன்மெண்ட் சார்பில் டி முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ பி கார்த்திகேயன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

கமர்சியல் மற்றும் திரில்லர் பாணியில் படம் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது .

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படம் கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளது.