நேரலை கலந்துரையாடலில் மணிரத்னத்தைப் பார்த்த சந்தோஷத்தில் அழுத குஷ்புவின் மகள்….!

ஊரடங்கு உத்தரவின் பேரில் மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர் . இதனால் திரையுலகினர் சமூக வலைத்தளத்தில் நேரத்தை போக்கி கொண்டுள்ளனர் .

அந்த வகையில் மணிரத்னம் பதிலளிப்பார் என சுஹாசினி சமீபத்தில் ஒரு செல்போன் என்னை குடுத்து ரசிகர்களை கேள்வி கேட்க சொன்னார் .

இந்த நேரலையில் ரசிகர் ஒருவர் “நடிக்கும் ஆசை வந்திருக்கிறதா? என கேட்க அதற்கு பதில் சொல்வதற்குள் குஷ்பு நேரலையில் வந்தார். “வேண்டாம், நடிக்காதீர்கள். நடிக்காதீர்கள்” என்று அலற, உடனே மணிரத்னம், “பார்த்தீர்களா, நீங்கள் இப்படி அதிர்ச்சி ஆக வேண்டாம் என்றுதான் நான் நடிக்கவில்லை” என்றார்.

அதற்கு குஷ்பு, “இல்லை, ஏற்கெனவே உங்கள் படங்களைப் பார்த்து எங்களுக்குத் தூக்கம் வருவதில்லை. நீங்கள் நடிக்கவும் ஆரம்பித்தால் அவ்வளவுதான்” என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேச, இதனிடையில் குஷ்பூவின் மகள் அனந்திகா வர , மணிரத்னம் அவரை பார்த்தவுடன் அழ ஆரம்பித்து விட்டார் .

“நான் உங்கள் மிகப்பெரிய ரசிகை. நான் உங்கள் ‘ரோஜா’, ‘தளபதி’, ‘மௌன ராகம்’ ஆகிய படங்களைப் பார்த்துக் கொண்டே இருப்பேன். நேற்று கூட பார்த்தேன்” என்றார்.

அதன் பின் குஷ்பு, “தலைமுறைகளைத் தாண்டி எப்படி எல்லோரையும் ஈர்க்கிறீர்கள்?” என்ற கேள்வியை மணிரத்னத்திடம் எழுப்பினார்.

அதற்கு மணிரத்னம், “அது மாயாஜாலம், அந்த ரகசியத்தை எப்படி வெளியே சொல்ல முடியும்? அதைப்பற்றிச் சொல்லக்கூடாது” என்று பதில் அளித்தார்.