28 வருடங்கள் கழித்து ரஜினியுடன் இணையும் குஷ்பு….!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினியின் 168 வது படத்தை சிவா இயக்குகிறார் ’வீர்ம்’, ’வேதாளம்’, ‘விவேகம்’ மற்றும் ‘விஸ்வாசம்’ என வெற்றிப்படங்களை கொடுத்தவர் சிவா.

இப்படத்தில் காமெடியனாக நடிகர் சூரி இணைந்துள்ளார். இதில் ரஜினியுடன் நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக நேற்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இதனையடுத்து நடிகை மீனா இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு சர்ப்ரைஸ் அப்டேட்டை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். 28 வருடங்கள் கழித்து அண்ணாமலை படத்திற்கு பின்னர் ரஜினி படத்தில் குஷ்பூ நடிக்கிறார் என்பதே .