மயிலாடுதுறை:
குத்தாலம் சட்டமன்ற தொகுதியை மறுசீரமைப்பு செய்து மீண்டும் சேர்க்க வேண்டும் என்று மயிலாடுதுரை மாவட்ட கருத்துக்ககேட்பு கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தின் 38வது மாவட்டமாக  மயிலாடுதுறை உதயமானது. அந்த  மாவட்டத்தின் எல்லைகளை வரை செய்யும் வகையில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி,  மயிலாடுதுறை புதிய மாவட்டத்திற்கு எல்லை வரையறை செய்வதற்காக சிறப்பு அதிகாரியாக லலிதா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டு உள்ளார்.
மயிலாடுதுறை புதிய மாவட்டத்தில் மயிலாடுதுறை பூம்புகார், சீர்காழி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம்பெறும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இருந்த குத்தாலம் சட்டமன்ற தொகுதி நீக்கப்பட்டு உள்ளது. ஆனால், குத்தாலம் ஊர் மயிலாடுதுறையில் இணைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இன்று மயிலாடுதுறையில் தொகுதி வரை குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட முன்னாள் எம்.எல்.ஏ.ஜெகவீரபாண்டியன்,  குத்தாலம் சட்டமன்ற தொகுதியை மீண்டும் மறுசீரமைப்பு செய்து சேர்க்க  வேண்டும் என்றும்,  தமிழகத்தின் தொகுதி வரையறையின்போது போதிய விழிப்புணர்ச்சியில்லாததால்  குத்தாலம் சட்டமன்றத் தொகுதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. அதனால் ஒரு சட்டமன்ற உறுப்பினரை இழந்துவிட்டோம். அந்த தொகுதி மீட்டெடுக்கப்பட்டால் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கிடைக்கப்பெறுவார்கள்.
மயிலாடுதுறை  4 சட்டமன்ற உறுப்பினர்களைக்கொண்ட மாவட்டமாக இருக்கும் பட்சத்தில்,  மாவட்டத்திற்காக, தேவைகளை விரைந்து குரல் எழுப்பிட ஏதுவாக அமையும் ஆகவே இழந்த குத்தாலம் சட்டமன்ற தொகுதியை மீண்டும் சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு செய்து அமைத்து தர கோருகின்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.