வெளியானது குதிரைவால் பட டீஸர்….!

இயக்குநராக மட்டுமன்றி ‘பரியேறும் பெருமாள்’, ‘குண்டு’ உள்ளிட்ட படங்களையும் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார் பா.இரஞ்சித்.

இதனிடையே, கலையரசன், அஞ்சலி பாட்டீல் நடித்துள்ள ‘குதிரைவால்’ படத்தை வெளியிடுகிறார் பா.இரஞ்சித்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் – ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியுள்ளனர். படத்தின் கதையை ராஜேஷ் எழுதியிருக்கிறார்.பிரதீப் குமார் மற்றும் மார்ட்டின் விஸ்ஸர் இசையமைக்கின்றனர்.

யாழி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. நகைச்சுவையான இந்த டீஸரில் கலையரசனுக்கு வால் முளைத்துள்ளது. டீஸரை பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.