‘குதிரைவால்’ படத்திற்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்….!

இயக்குநராக மட்டுமன்றி ‘பரியேறும் பெருமாள்’, ‘குண்டு’ உள்ளிட்ட படங்களையும் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார் பா.இரஞ்சித்.

இதனிடையே, கலையரசன், அஞ்சலி பாட்டீல் நடித்துள்ள ‘குதிரைவால்’ படத்தை வெளியிடுகிறார் பா.இரஞ்சித்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் – ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியுள்ளனர். படத்தின் கதையை ராஜேஷ் எழுதியிருக்கிறார்.பிரதீப் குமார் மற்றும் மார்ட்டின் விஸ்ஸர் இசையமைக்கின்றனர்.

யாழி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதியிலிருந்து 19 ஆம் தேதிவரை திருவனந்தபுரத்தில் கேரள அரசின் கலாசார விவகாரங்கள் துறையால் நடத்தப்படும் ’கேரள சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய பிரிவில் திரையிட தேர்வாகியிருக்கிறது.