நீலம் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் கலையரசன், அஞ்சலி பாட்டீல் நடித்துள்ள படம் குதிரைவால். இந்த படத்தை பா.ரஞ்சித் வெளியிடுகிறார்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் – ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

யாழி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீசர் கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி வெளியாகி சமூக வலைதளத்தில் சக்கை போடு போட்டது.

2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதியிலிருந்து 19 ஆம் தேதிவரை திருவனந்தபுரத்தில் கேரள அரசின் கலாச்சார விவகாரங்கள் துறையால் நடத்தப்படும் கேரள சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய பிரிவில் திரையிட தேர்வாகியிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு கூடுதல் அங்கீகாரம் கிடைத்துள்ளது. பெர்லின் கிரிட்டிக் வீக் என்ற சர்வதேச திரைப்பட விழாவிற்கும் குதிரை வால் தேர்வாகியுள்ளது.