இந்தியா சார்பாக சர்வதேச அளவில் பல நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களைப் பெற்றவர் குற்றாலீஸ்வரன் . இவர் கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றவர். 1996-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இவருக்கு அர்ஜுனா விருது வழங்கியது.

இவர் தற்போது நடிகர் அஜித்தை சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பில் எடுத்த புகைப்படங்களை குற்றாலீஸ்வரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

குற்றாலீஸ்வரன் பகிர்ந்துள்ள புகைப்படத்தில் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக் இல்லாமல் , தாடி மீசை கூட இல்லாமல் காணப்படுகிறார்.

ஹெச்.வினோத் இயக்கும் அடுத்த படத்தில் இந்த புதிய தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன், த்ரில்லர் படமாக உருவாகும் இதை போனி கபூர் தயாரிக்கிறார்.