கவிஞர் குட்டி ரேவதி ‘சிறகு’ என்கிற படத்தை இயக்குகிறார். மாலா மணியன் தனது FIRST COPY PRODUCTIONS (ஃபர்ஸ்ட் காப்பி புரொடக்ஷன்ஸ்) மூலம், ‘சிறகு’, தயாரித்துள்ளார்.

‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் நமக்கு அறிமுகமான ராஜா பட்டாச்சார்ஜி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

‘மெட்ராஸ் ‘, ‘கபாலி’, ‘வடசென்னை ‘, ‘சண்டைக்கோழி-2 ‘, ‘பரியேறும் பெருமாள் ‘, ஆகிய படங்கள் மூலம் நமக்கு அறிமுகமான ஹரி கிருஷ்ணன் இப்படத்தின் நாயகனாக நடிக்க , அவருக்கு ஜோடியாக அக்ஷிதா நடிக்கிறார்.

இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்திற்கு தணிக்கை குழுவினர் “யூ” சான்றிதழ் வழங்கியுள்ளனர்.