குவைத்சிட்டி: வளைகுடா பகுதியில் அமைந்த சிறிய நாடான குவைத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 20 நாள் ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், வளைகுடா பகுதி முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. சவூதி உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக, குவைத் அரசின் செய்தி தொடர்பாளர் தாரிக் அல் மிஸ்ரிம் கூறியுள்ளதாவது, “குவைத் நாட்டில் இதுவரை 7,205 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்தம் 47 பேர் பலியாகியுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 641 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. எனவே, இந்தத் தொற்றானது சமூகப் பரவலாக மாறுவதற்கு முன்னர், நாடு முழுவதும் மே 10ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை மொத்தம் 20 நாட்களுக்கு ஊரடங்கு அமல் செய்யப்படுகிறது” என்றார்.