குவைத்:
லங்கை உட்பட்ட 31 நாடுகளுக்கான வர்த்தக நோக்க விமான பயணங்களை குவைத் தடை செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திச்சேவைகள் தெரிவிக்கின்றன. இந்த நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, பிலிப்பைன்ஸ், லெபனான் ஆகிய நாடுகளும் உள்ளடங்குகின்றன. இந்த நாடுகளின் பெருமளவான பணியாளர்கள் குவைத்தில் பணிபுரிகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்நிலையில் சீனா, ஈரான், பிரேசில் மெக்சிக்கோ, இத்தாலி, ஈராக் ஆகிய நாடுகளுடன் உடனான வர்த்தக விமான சேவைகளுக்கும் குவைத் தடைவிதித்துள்ளது.

குவைத்தில் இன்று வர்த்தக நோக்க விமானச்சேவைகள் பகுதியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அறிவித்தலும் வெளியாகியுள்ளது. குவைத்தில் இதுவரை 67ஆயிரம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 400 பேர் வரை கொரோனாவினால் காவுகொள்ளப் பட்டுள்ளனர். இந்தநிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த அந்த நாட்டில் ஐந்து அம்ச திட்டம் ஜூன் மாதம் முதல் அமுல் செய்யப்பட்டு வருகிறது.