குவைத்திலிருக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப விமான சேவை துவக்கம்…

--
குவைத்: 
குவைத்திலிருக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப விமான சேவை தொடங்கப்படவுள்ளது.
குவைத்திலிருந்து இந்தியாவுக்கு வர விரும்பும் இந்தியர்களுக்கு, இந்திய அரசு விமான சேவையை தொடங்கவிருக்கிறது. இதுகுறித்து இந்திய அரசு குவைத் அரசுடன் கலந்துரையாடியுள்ளது, அதன்படி குவைத்தில் இருக்கும் இந்தியர்கள் இந்தியாவுக்கு திரும்ப விரும்பினால் ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் அக்டோபர் 24- ஆம் தேதி வரை விமான சேவை தொடரும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.
குவைதின் விமான போக்குவரத்து இயக்குனரகம் இரு நாடுகளுக்கிடையே விமான போக்குவரத்தை தொடர ஒப்புக்கொண்டுள்ளதை தொடர்ந்து… ஒரு நாளைக்கு 1000 இந்தியர்கள் குவைத்திலிருந்து இந்தியா திரும்புவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் இருக்கும் இந்தியர்கள் இந்தியா திரும்புவதற்கு மட்டுமே விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது என்றும், இந்தியாவிலிருந்து யாரும் குவைத்துக்கு செல்ல முடியாது என்றும் இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள 31 நாடுகளுக்கு விமான போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்தது, அது இனியும் தொடரும் என்று குவைத் அரசு உறுதிசெய்துள்ளது.

You may have missed