குவைத்தில் அதிரடி – போலி விசா, சம்பளத்தாமதம் அனைத்துக்கும் கடும் தண்டனை

குவைத்

புதிதாக இயற்றப் பட்டுள்ள தொழிலாளர் நலச்சட்டங்கள், போலி விசா, சம்பளம் தாமதம், அபராதங்கள் போன்ற செயல்களில் ஈடுபடும் முதலாளிகளுக்கு கடும் தண்டனை என எச்சரிக்கின்றன.

குவைத்தின் தேசிய அசம்பளி நேற்று தொழிலாளர் நலச்சட்டங்களில் பல புதிய பிரிவுகளை இயற்றியுள்ளது.

இதன்படி புதிதாக அமலாக்கப்படும் சட்டங்கள் :

வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்திவிட்டு, ஆனால் தனது நிறுவனத்தில் வேலை தராத முதலாளிகளுக்கு 1000 முதல் 5000 வரை குவைதி தினார் அபராதமோ, அல்லது மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையோ, அல்லது இரண்டுமோ வழங்கப்படும்.

இதுவே அதிக அளவில் ஊழியர் இருந்தால் ஒரு ஊழியரின் எண்ணிக்கையை பொறுத்து தண்டனை அதிகரிக்கப்படும்.

இது ஊழியரின் நாட்டை மாற்றிப் பதிபவருக்கும் பொருந்தும்.

ஒரு சிலர் தங்களின் பெயரில் விசா லைசென்ஸ் வாங்கி விட்டு, அதனை மற்றவர்களுக்கு மாற்றிக் கொடுத்து கமிஷன் பெற்றுக் கொள்வதும் உண்டு.

அது போன்ற குற்றங்களுக்கும் அபராதம், சிறைத்தண்டனை ஆகியவைகள் உண்டு.

ஊதியத்தை தாமதமாக அளிப்பதும் குற்றமாகும்.

அவ்வாறு அளித்தால், தர வேண்டிய ஊதியத்தில் 1% அபராதம் செலுத்த வேண்டும்.

ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கும் உரிமை எந்த முதலாளிக்கும் இல்லை.

அபராதம் விதிப்போருக்கு சிறைத்தண்டனை உண்டு.

மேற்கூறிய சட்டங்கள் ஒருமனதாக நிறைவேற்றப பட்டு உடனடியாக அமுலுக்கு வந்தன.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: kuwait labor law stiffens visa trading and salary delay
-=-