இந்தியா, சீனாவின் உய்குர் முஸ்லிம்களுக்கு ஆதரவு தந்த குவைத் எம்பிக்கள்: சர்வதேச நாடுகளுக்கும் அழைப்பு

குவைத்: இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கும், சீனாவில் உள்ள உய்குர் முஸ்லிம்களுக்கும் குவைத் எம்பிக்கள் 27 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நாங்கள் மட்டுமல்ல, இந்த அரசாங்கமும், சர்வதேச நாடுகளும் இதே போன்று ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

சட்ட விதிகளை மீறியும், துஷ்பிரயோக நடவடிக்கைகளை பயன்படுத்தி சிரமங்களை சிறுபான்மை முஸ்லிம்கள் சந்தித்து வருகின்றனர். அவர்களின் துயரங்களை போக்கும் வகையில் ராஜ தந்திர நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் அவர்கள் அந்த கூட்டறிக்கையில் அழைப்பு விடுத்து உள்ளனர்.