குவைத் மன்னர் மருத்துவமனையில் அனுமதி : பட்டத்து இளவரசர் பொறுப்பு ஏற்பு

--

குவைத்

குவைத் மன்னர் உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பட்டத்து இளவரசர் பொறுப்பு ஏற்றுள்ளார்.

கடந்த 2006 முதல் குவைத் மன்னராக ஷேக் சபா அல் அகமது அல் சபா உள்ளார்.  அவருக்கு தற்போது 91 வயதாகிறது.   இவருக்கு கடந்த அமெரிக்காவில் கடந்த 2007 ஆம் வருடம் சிறுநீர் பாதையில் அறுவை சிகிச்சை நடந்தது.   அதன் பிறகு அவர் அடிக்கடி உடல்நல கோளாறு காரணமாக மருத்துவப் பரிசோதனைகள் செய்து  கொள்கிறார்.

கடந்த 2019 செப்டம்பர் மாதம் அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடந்தன.  நேற்று குவைத் மன்னர் மீண்டும் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டுள்ளார்.   மருத்துவப் பரிசோதனைகளுக்காக அவர் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசுக் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.

அந்த அறிவிப்பில் குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் நவாஃப் அல் அகமது சபா தற்காலிகமாக மன்னரில் அனைத்து பொறுப்புக்களையும் ஏற்பார் எனக் கூறப்பட்டுள்ளது.   தற்போதைய மன்னரின் சகோதரரும் பட்டத்து இளவரசருமான ஷேக் நவாஃபுக்கு தற்போது 83 வயதாகிறது