*வெட்டுக்கிளி தாக்குதல் சம்பவம் படமாக்கியது எப்படி? என்பது குறித்து பத்திரிகை.காம் இணைய இதழுக்கு பிரபல டைக்ரட்ர் கே.வி.ஆனந்த் சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது, அடுத்த பாட்ஷா பாணியில் மாபியா டான் கதை இயக்குவேன் என்று தெரிவித்தார்.

கனா கண்டேன், அயன். மாற்றான், காப்பான் போன்ற படங்களை இயக்கியவர் கே .வி ஆனந்த். இவர் இயக்கிய காப்பான் படம் கடந்த ஆண்டு வெளிவந்தபோது,  தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் வெட்டுக்கிளிகள் தொடர்பாக  பரபரப்பாக பேசப்பட்டது.  அப்படத்தில் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று விவசாய நிலங்களை அழித்து தரிசு நிலமாக்கு வதற்காக இலட்சக்கணக் கான வெட்டுக்கிளிகளை ஏவி விட்டு பயிர்களை அழிப்பார்கள். இப்படிக்கூட நடக்குமா என்று பலர் கேள்வி எழுப்பிய நிலையில் தற்போது ராஜஸ்தான், பஞ்சாபில் வெட்டுக்கிளிகள் படை எடுப்பு நடந்துக் கொண்டிருக்கிறது. 50 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் நாசமாகிவிட்டன.
இப்படியொரு காட்சியை முன்னரே சிந்தித்து காப்பான் படத்தில் வைத்து எடுத்து எப்படி என்பதற்கு விரிவாக பதில் அளித்தார் இயக்குனர் கே வி ஆனந்த். அவர் கூறியதாவது :
மாற்றான் படத்தின் முன்திட்டமிடல் பணிக்காக நான் மடகாஸ்கர் நாட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது காரில் ஒரு இடத்துக்கு சென்றபோது திடீரென்று லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் (Locusts) பறந்து வந்தது. எங்களால் காரை ஓட்ட முடியாததால் நிறுத்தி விட்டோம். அவைகள் கடந்து சென்ற பிறகுதான் காரை எடுத் தோம்.
அதன்பிறகு காப்பான் படத்தில் அந்த சம்பவத்தை பயன்படுத்தலாம் என்று முடிவு செய்து அதுபற்றி ஆராய்ந்தேன். அதிர்ச்சி தரக்கூடிய பல தகவல்கள் கிடைத்தன.
ஜன நடமாட்டமே இல்லாத இடங்களில்தான் இந்த லோகஸ்டஸ் உருவாகின்றன. அவைகள் முட்டை போட்டு குஞ்சு பொரிக்கும். அதுவும் மண்ணுக்கு அடியில் சென்று முட்டை யிடும் அதற்கான சீசன் வரை மண்ணுக்குள்ளேயே கிடக்கும்.
கோடைகாலம் முடிந்துமழைக்காலம் தொடங்கும்போது அவை குஞ்சுகளாக வெளியில் வந்து தரையில் தவழ்ந்து செல்லும் ஜன நடமாட்டம் இருந்தால் மனிதர்களின் காலில் மிதிபட்டு இறந்து விடும். அதனால்தான் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளாக லோகஸ்டஸ் முட்டையிடும் பகுதியை தேர்வு செய்கிறது.
தேர்வு செய்கின்ற அவை லட்சம், கோடிகளில் பெருகி கூட்டமாக. பறந்து வந்து பயிர்களை தாக்கி அழிக் கின்றன.
1903ம் ஆண்டில் அதாவது நூற்றாண்டுக்கு முன்பு இந்தியாவில் மும்பையில் லோகஸ்டஸ் தாக்குதல் நடந்திருக்கிறது என்பது வரலாறு. அந்த தாக்குதல் சில ஆண்டுகள் தொடர்ந்தன. தற்போது ராஜஸ்தான், பஞ்சாப்பில் தாக்குதல் நடக்கிறது. அவைகளை அழிக்க அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

ஒரு கட்டத்தில் இந்த லோகஸ்டஸ் கண்டிப்பாக மண்ணுக்கு அடியில் முட்டையிடும். முட்டையிட்ட பிறகு அவைகள் செத்து விடும்.இவைகளை எலிகள் திண்ணும் அப்போது எலிகளால் நோய்கள் உண்டாகும்.
தமிழில் இதிகாசங்கள் புராணங்கள் இருந்தபோதும் இதுபோன்ற பூச்சிகளின் தாக்குதல் பற்றி குறிப்புகள் இல்லை. ஆனால் பைபிள், குரானில் இதுபோன்ற பூச்சிகளின் தாக்குதல் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் மேலை நாடுகளில் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கிறது. இந்தியாவில் குறிப்பாக தெற்கு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கவில்லை என்பது தெரிகிறது.
இவ்வாறு வெட்டுக்கிளிகள் தாக்குதல் பற்றி விரிவாக சொன்னார் கேவி ஆனந்த்.
அவரிடம் அடுத்து அயன் இரண்டாம் பாகம் இயக்கவுள்ளதாக கூறப் படுக்கிறதே அது உண்மையா என்றதற்கு பதில் அளித்தார்.
அவர் கூறும்போது, ‘
இரண்டாம் பாகம் இயக்குவதில் எனக்கு ஆர்வ மில்லை. ஆனால் மாஃபியா கதை ஒன்றை எழுதி வருகிறேன். பாட்ஷா, நாயகன் பாணியிலான கதை இதற்காக பெங்களூர் சென்று சில நிஜ தாதாக் களை சந்த்தித்து பேசினேன். அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன. இதில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் என்று முடிவாகவில்லை’ என்றார்.