மேட்ரிட்: ‘லா லிகா’ கால்பந்து தொடரில், லீக் போட்டியில், ரியல் வல்லாடோலிட் அணியை, 1-0 என்ற கணக்கில் வென்ற பார்சிலோனா அணி வீழ்த்தி, மொத்தமாக 79 புள்ளிகள் பெற்று இரண்டாமிடத்தில் உள்ளது.
ஸ்பெயின் நாட்டில் உள்ளூர் கிளப் அணிகள் பங்கேற்கும் ‘லா லிகா’ கால்பந்து தொடர்  நடந்து வருகிறது. இத்தொடரில், இதுவரையான போட்டிகளில் முடிவில், பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளுககு இடையே, கோப்பை வெல்வதில் கடும் போட்டி நிலவுகிறது.
பார்சிலோனா அணி இதுவரை ஆடிய 36 போட்டியில், 24 வெற்றி, 7 டிரா மற்றும் 5 தோல்வி என்ற முறையில் 79 புள்ளிகள் பெற்றுள்ளது. ரியல் மாட்ரிட் அணி மொத்தம் 35 போட்டிகள் விளையாடிய நிலையில் 80 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில, கோப்பை வெல்ல வேண்டுமானால், அடுத்துவரும் 2 போட்டிகளிலும் வென்றாக வேண்டிய நிலையில் உள்ளது பார்சிலோனா அணி. மேலும், ரியல் மேட்ரிட் அணி, தான் அடுத்து ஆடவுள்ள 3 போட்டிகளிலும் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில்தான் பார்சிலோனா அணிக்கான வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நடப்புச் சாம்பியனாக பார்சிலோனா அணி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.