விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் `லாபம்’ படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடிக்கிறார். மேலும் கலையரசன், சாய் தன்ஷிகா உள்ளிட்ட பலர் அதில் இணைந்துள்ளனர் . இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.

லாபம் படத்தில் விஜய் சேதுபதி இரண்டு வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த ஃபர்ஸ்ட் லுக் குறித்து இயக்குநர் ஜனநாதன், “இங்குச் சுட்டவர்களும் குடிமக்கள் தான். சுடப்பட்டவர்களும் குடிமக்கள் தான்” என்று தெரிவித்துள்ளார்.