மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் லாபம் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார்.

ஜகபதி பாபு, சாய் தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

லாபம் படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைபற்றியுள்ளது. இத்திரைப்படம் நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியா போவதாக அண்மையில் செய்திகள் வந்தன.

லாபம் திரைப்படம் ரம்ஜானை முன்னிட்டு மே மாதம் வெளியாகும் என விஜய் சேதுபதி நேற்று அறிவித்தார். அவரது துக்ளக் தர்பார் ஓடிடி யில் வெளியாகும் நிலையில், லாபம் திரையரங்குகளில் வெளியாவது பெரும் ஆறுதல்.