விஜய்சேதுபதியின் ‘லாபம்’ ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் `லாபம்’ படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடிக்கிறார். மேலும் கலையரசன், சாய் தன்ஷிகா உள்ளிட்ட பலர் அதில் இணைந்துள்ளனர் . இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.

லாபம் படத்தில் விஜய் சேதுபதி இரண்டு வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார்.

ஊரடங்கு காரணமாக தடைபட்டிருந்த ‘லாபம்’ படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் தொடங்கின.

இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது .

அதை தொடர்ந்து தற்போது இந்தப் படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஐந்து மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர் .