தொழிலாளர் தினம்: மே தின பூங்காவில் ஸ்டாலின் மரியாதை!

சென்னை,

ன்று மே.1 நாடு முழுவதும் தொழிலாளர் தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தொழிலாளர் தினத்தையொட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள நினைவு சின்னத்தில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

தொழிலாளர்களின் உரிமைகளுக்காக பாடுபட்டவர் கலைஞர். மே தின பூங்காவில் உழைப்பாளர்களின் நினைவு சின்னம் கலைஞர் ஆட்சியில் தான் நிறுவப்பட்டது. தொழிலாளர்களின் நலனுக்காக தொழிற் சங்கங்கள் மட்டுமே பாடுபடுகின்றன. விவசாய உழைப்பாளர்களை காப்பாற்ற தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை., அவர்களை காப்பாற்ற  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாய தொழிலாளர்களுக்காக 25-ந் தேதி நாங்கள் முழு அடைப்பு போராட்டம் நடத்தினோம். அது மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதற்காக தொழிற் சங்கங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, டி.கே.எஸ். இளங்கோவன்  உள்பட ஏராளமான பிரமுகர்களும் எல்.பி.எப். தொழிற்சங்க நிர்வாகிகளும் திரளாக வந்து மே தின பூங்காவில் மரியாதை செலுத்தினார்கள்.

இதேபோல் தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில துணைப் பொதுச்செயலாளர் சத்ரியன் வேணுகோபால், தொழிற்சங்க செயலாளர் சைதை சிவராமன், தலைவர் ஜம்புலிங்கம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும் மே தின பூங்காநினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார்கள்.