‘கூலியை விரட்டிய கொரோனா .. கோடியைக் கொட்டிய லாட்டரி..

முர்ஷிதாபாத்

கொரோனாவால் பணி இழந்த கூலித் தொழிலாளிக்கு லாட்டரிபரிசு விழுந்துள்ளது

கொரோனாவால் விரட்டப்பட்ட கூலி ஒருவருக்கு லாட்டரி சீட்டு, கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்த கதை இது:

மே.வங்காள மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள மிர்சாபூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான இசருல் ஷேக் ,பஞ்சம் பிழைக்கக் கேரளா போனார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் அவர் அங்கிருந்து சொந்த ஊருக்கே வர நேரிட்டது.

கடந்த வாரம், பொழுது போகாத ஒரு தருணத்தில் பக்கத்து நகருக்குச் சென்ற ஷேக், மாநில அரசின் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.

முதல் பரிசு அவருக்கே விழுந்துள்ளது.

எவ்வளவு தெரியுமா?

ஒரு கோடி ரூபாய்.

விஷயம் கேள்விப்பட்டு , ஊரே ஷேக் வீட்டு முன்பு திரள ஆரம்பித்தது.

மிரண்டு போன ஷேக், போலீஸ் ஸ்டேஷன் சென்று ‘’ எனக்குப் பயமாக உள்ளது. போலீஸ் பாதுகாப்பு கொடுங்கள்’’ என்று முறையிட்டுள்ளார்.

திருமணமாகி மனைவி, ஒரு மகளுடன் வசிக்கும் ஷேக்கின் தந்தை ரிக்‌ஷா ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார்.

–  ஏழுமலை வெங்கடேசன்