கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி தற்கொலை முயற்சி! பரபரப்பபு

கரூர்.

ரூர் மாவட்ட கலெக்டர் வளாகத்தில், தொழிலாளி ஒருவர் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றால்…. இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தீக்குளிக்க முயன்றவரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அதுபோல நேற்று கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தபோது திடீரென தீக்குளிக்க முயன்றார்.

விசாரணையில், அவர்  கரூர் தாந்தோணிமலை பூங்கா நகரைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணி என்பதும், ஜவுளி ஏற்றுமதி நிறுவனத் தொழிலாளி என்பது தெரிய வந்தது.

கனவன் மனைவி பிரிந்து வாழும் நிலையில், சொத்து பிரச்சினை தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்காததால்,  விரக்தியடைந்த சிவசுப்பிரமணி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்து, ஆட்சியரக வளாகத்தில் திடீரென உடலில் மண்ணெண்ணெயை ஊற்றித் தீக்குளிக்க முயன்றார்.

உடனே அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவரைத் தடுத்து, அங்கிருந்த மினி தீயணைப்பு வாகனம் மூலம் அவர் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து காப்பாற்றினார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.