லாக்டவுனில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட சூரத் ஆலை தொழிலாளர்கள்: கற்களை வீசி தாக்குதல்

சூரத்: கொரோனா லாக் டவுனுக்கு மத்தியில் சூரத்தில் உள்ள வைரம் வர்த்தக மையத்தில் தொழிலாளர்களை பணியாற்றுமாறு கட்டாயப்டுத்தியதால் அவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

சூரத்தில் உள்ள டயமண்ட் போர்ஸ் என்ற வைர வர்த்தக மைய அலுவலகத்தில் தான் இந்த சம்பவம் நடந்தது. அங்கு திரண்ட ஏராளமான தொழிலாளர்கள் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து, கற்களை வீசினர்.

தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர். தொழிலாளர்கள் அனைவரும் ராஜஸ்தான், ஒடிசா, உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்திருக்கின்றனர்.

முன்னதாக 2 வாரங்களுக்கு முன்பாக, புலம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க கோரி போராட்டமும் நடத்தியது குறிப்பிடத்தக்கது.