பெரியோர்களே… தாய்மார்களே…

அரசியல் தலைவர்களின் அனலடிக்கும் இன்றைய பேச்சுக்கள்..

 

0

ஜி.கே. வாசன்:

தி.மு.க.  – அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகள்தான் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு கொடுக்க பணம் கடத்துவதாக அனைவரும் சொல்கிறார்கள். அவர்கள் எப்படி கடத்துகிறார்கள் என்பதை “ரூட் கிராஸ்” செய்து தேர்தல் ஆணையம் பிடிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு ஆடு வாங்க, மாடு வாங்க போகும் வியாபாரிகளை பிடித்து பணத்தை பறிப்பது என்ன நியாயம்?

 

1

 

இல.கணேசன்:

அ.தி.மு.க – தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கு அடுத்து மூன்றாவது பெரிய கட்சி பா.ஜ.க.தான். எங்களுக்கு 5.9 சதவிகித ஓட்டு வங்கி இருக்கிறது.  ஆகவே வரும் தேர்தலில் பா.ஜ.க. கணிசமான வெற்றி பெறும். பாஜகவின் ஆதரவு இல்லாமல் யாரும் அடுத்த ஆட்சியை அமைக்க முடியாது.

 

2

கார்த்திக்:

எங்களது நாடாளும் மக்கள் கட்சி முக்கி பிரமுகர்களை அ.தி.மு.க.வினர் மிரட்டி, தங்களுக்கு ஆதரவாக தேர்தலில் செயல்படச் சொல்கிறார்கள்.  எங்களது வேட்பாளர்களை அ.தி.மு.க.வினர் விலை பேசுகிறார்கள். ஒரு வேட்பாளருக்கு இரண்டே கால் லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கிவிட்டார்கள். கேட்டிருந்தால் அந்த பணத்தை நானே கொடுத்திருப்பேன்.  ஆனால் இதற்கெல்லாம் அ.தி.மு.க.வினர்தான் காரணமே தவிர, அ.தி.மு.க. தலைமை அல்ல. ஆகவே ஜெயலலிதாவை குற்றம் சொல்ல மாட்டேன்.

 

3

 விந்தியா:

பத்திரிகை சுதந்திரத்தை காப்பது அ.தி.மு.க.தான். ஆனால் தாங்கள்தான் பத்திரிகை சுதந்திரத்தை காப்போம் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறது தி.மு.க.! இவர்கள் ஆட்சியில்தானே மதுரை தினகரன் அலுவலகத்தில் மூன்று பேரை எரித்துக்கொன்றார்கள்.