லக்னோ,

உ.பி. மாநிலத்தில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்தில் பெண்கள் நடந்துகொண்டே மொபைலில்  பேசினால் 21ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதாக பஞ்சாயத்தார் விநோதமான முடிவை எடுத்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா கிராமத்தில் நேற்று பஞ்சாயத்தார் கூட்டம் கூடியது. அப்போது அவர்கள் மொபைல் போன் குறித்தும், பசு வதை குறித்தும் விவாதித்தனர். அதைத் தொடர்ந்து முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தனர்.

மதுரா கிராமப்பகுதி பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டியது குறித்து அவர்கள் கூறியதாவது,

பெண்கள்  சாலையில் நடக்கும்போது, போன் பேசிக்கொண்டே சென்றால் 21,000 அபராதம் விதித்து உத்தரவிட்டனர். பெண்களின் கவனக் குறைவைப் போக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.

மதுபானங்கள்  விற்பனை செய்தால், அவர்களுக்கு 1.11 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

பசு வதை செய்வோருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம்.

இந்த உத்தரவுகள் அனைத்தும், கிராம மக்களின் சம்மதத்துடன் பிறப்பிக்கப்படுவததாக கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் கூறி உள்ளார்.

இந்த உத்தரவு காரணமாக மதுரா கிராமம் பிரபலமாகி வருகிறது.