பெண்களின் தீவிர மாதவிடாய் பிரச்னைக்கு விரைவில் விடுதலை….புதிய மருந்து கண்டுபிடிப்பு

லண்டன்:

தீவிர மாத விடாயை விரைந்து குணமாக்கும் மருந்தை லண்டனில் உள்ள எடின்பெர்க் பலக்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் ரத்தப்போக்கு விரைந்து நிறுத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாத விடாய் காலத்தில் ஆக்சிஜன் அளவு குறையும். இதை ஹைபோக்சியா என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் ஹெச்ஐஎப் என்ற புரத சத்து உற்பத்தி தடைபடுகிறது. இதனால் கருப்பை புரணி பாதிக்கிறது. சாதாரணமாக வெளியேறும் ரத்தத்தை விட தீவிர மாத விடாய் காலத்தில் அதிகளவு ரத்தம் வெளியேறி, ஹெச்ஐஎப் அளவு மிகவும் குறைந்துவிடும்.

இதற்கு எடின்பெர்க் பல்லைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு மருந்தை கண்டுபிடித்துள்ளனர். இதை எலிகளுக்கு செலுத்தி பரிசோதனை மேற்கொண்டனர். இந்த மருத்து தீவிர மாத விடாய் காலத்தில் வெளியேறும் ரத்தம் மூலம் குறையும் ஹெச்ஐஎப் அளவை அதிகரிக்கச் செய்வது உறுதிபடுத்தப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர் ஜாக்கி மேபின் தெரிவித்துள்ளார்.

இந்த ஆராய்ச்சி முடிவை தி இண்டிபெண்டன்ட் இதழ் வெளியிட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி முடிவை மருத்துவ ஆராய்ச்சி குழுவின் மக்கள் தொகை மற்றும் மருத்துகள் துறைத் தலைவர் டாக்டர் நெஹா ஐசர் பிரவுன் வரவேற்றுள்ளார்.

கார்ட்டூன் கேலரி