பெண்களே.. உங்கள் அறையில் ரகசிய கேமரா இருக்கிறதா என்று கண்டுபிடிக்க வேண்டுமா? இந்த சென்னை பெண்கள் வழியை பின்பற்றுங்கள்!

வீன வசதிகள் பெருகப்பெருக பெண்களுக்கான  ஆபத்தும் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதல் ஒன்று ரகசிய கேமரா.  வீட்டிலோ விடுதி அறையிலோ குளிலறையிலோ கண்ணுக்குத் தெரியாத சின்னஞ்சிறு கேமராக்களை வைத்துவிடும் வக்கிர மனிதர்கள், அதில் பதியும் காட்சிகளை வைத்து பெண்களை மிரட்டத்துவங்குவார்கள். இதை கண்டுபிடித்துத்  தடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறார் சென்னையில் ஒரு விடுதியில் தங்கியிருந்த பெண்கள்.

ரகசிய கேமரா – சஞ்சீவ்

சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் முதல் தெருவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இதை நடத்தி வருபவர் திருச்சியைச் சேர்ந்த சஞ்சீவ் (வயது45) என்பவர்.

இந்த விடுதியில் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கட்டணம் செலுத்தித் தங்கியிருக்கிறார்கள்.  அனைவரும் ஐடி நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.

இந்த நிலையில், அறைகளில் சீரமைப்பு பணிகள் செய்வதாக கூறி அடிக்கடி ஏதேதோ செய்திருக்கிறார் சஞ்சீவ். இதனால் அங்கு தங்கியிருந்த பெண்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஒருவேளை ரகசிய கேமரா  ஏதும் வைக்கப்பட்டிருக்கிறதோ என்று நினைத்தார்கள்.  இதனால் எச்சரிக்கை அடைந்த அவர்கள், அதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

எப்படி கண்டுபிடிப்பது என்று யோசித்தவர்கள் இது குறித்து கூகுளில் ஆராய்ந்தார்கள். நம்மைச் சுற்றி ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டிருக்கின்றனவா என்பதைக் கண்டுபிடிக்கும்  Hidden Camera Detector App என்ற மொபைல் ஆப் குறித்து தெரியவந்தது.  உடனே அதை தங்கள் செல்போனில் தரவிரக்கம் செய்தார்கள். அதன் மூலம்,  விடுதி அறையில் ரகசிய கேமராக்கள் ஏதும் இருக்கிறதா என்பதை ஆராய்ந்தார்கள். இதில்  அறைகளில் ரகசிய கேமராக்கள் இருப்பது இருப்பது தெரியவந்தது.

கழிவறை, படுக்கையறை, துணி மாட்டும் கைப்பிடி (ஆங்கர்) உள்ளிட்ட இடங்களில் கண்களுக்கு தெரியாத சிறிய அளவிலான ரகசிய கேமராக்களை சஞ்சீவ் வைத்திருந்ததை கண்டுபிடித்தார்கள்.

 

உடனே பெண்கள் அனைவரும் சென்று ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  இதையடுத்து விடுதி அதிபர் சஞ்சீவ் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், விடுதியில் விசாரணை மேற்கொண்ட காவலர்கள்,  அறையில் இருந்த ரகசிய கேமராக்களையும், அவரது எலக்ட்ரானிக் சாதனங்கள், 16 செல்போன், ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற போலி ஆவணங்களையும் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட சஞ்சீவ் மீது 2011 முதல் பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும், இவர் பல பெயர்களில் போலி ஆவணங்கள் வைத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

#chennai #hiddencamera #ladieshostel #bathroom #Girls #mobileapp #owner #rrested