ரஜினிகாந்த் பேட்ட படத்துக்கு சீர்வரிசையுடன் சென்ற பெண்கள்

சென்னை

ஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படத்துக்கு பெண்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

பொங்கலை முன்னிட்டு இன்று ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படம் வெளியாகி உள்ளது.    ரஜினிகாந்தின் இளமை தோற்றத்துடன் கூடிய போஸ்டர்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளன.      ஏற்கனவே ரஜினி முதுமை தோற்றத்தில் வந்த காலா மற்றும் கபாலி எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த திரைப்படத்தில்  ரஜினிகாந்துடன் சிம்ரன் மற்றும் த்ரிஷா ஆகிய இருவரும் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர்.   அவர்களுடன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா உள்ளிட்ட கதாநாயகர்களும் உள்ளனர்.

இந்தப் பட வெளியீட்டை முன்னிட்டு ஒவ்வொரு ஊரிலும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   இந்த படத்தை வரவேற்கும் விதமாக பெண்கள் மேளதாளத்துடன் சீர்வரிசை தட்டை ஏந்தி திரையரங்குக்கு சென்றுள்ள்னர்.

ஒரு கட்டை வண்டியில் ரஜினிகாந்தின் 8 அடி உயர கட் அவுட்டை வைத்து ஊர்வலமாக பெண்கள் சென்றுள்ளனர்.  அப்போது அவர்கள் தங்கள் கைகலீல் உள்ள தட்டுக்களில் திராட்சை, முந்திரி, பழவகைகளை எடுத்துச் சென்று படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு வழங்கி உள்ளனர்.