பாஜக பிரமுகர் பாலியல் வன்கொடுமை : தலித் பெண் வழக்கறிஞர் நூதன போராட்டம்

 

க்னோ

லித் பெண் வழக்கறிஞர் ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்காததால் புதுமையான போராட்டம் ஒன்றை நடத்தி உள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர்  சதீஷ் சர்மா என்னும் வழக்கறிஞர்.  பாஜகவை சேர்ந்த இவர் தலித் வகுப்பை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவரை மூன்று வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.   இது குறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்தும் அவர்கள் வழக்கரிஞர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

அந்தப் பெண் வழக்கறிஞர் இதை ஒட்டி பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார்.  அந்த சந்திப்பில் தனது வினோத போராட்டமாக அனைவர் முன்னிலையிலும் தனது தலையை மொட்டை அடித்துக் கொண்டார்.   இது லக்னோ பத்திரிகையாளர்கள் இடையில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.  மொட்டை அடித்துக் கொண்ட அந்த பெண் வழக்கறிஞர் பத்திரிகையாளர்களிடம் உரையாற்றினார்.

அவர் தனது உரையில், “பாஜக பிரமுகரும், மூத்த வழக்கரிஞருமான சதீஷ் சர்மா என்னை மூன்று ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  அத்துடன் மனரீதியாக மிகவும் துன்புறுத்தி வருகிறார்.   அது மட்டும் இன்றி என்னை ஆபாசமாக வீடியோ எடுத்து அதைக்காட்டி என்னை மிரட்டுகிறார்.

சதீஷ் சர்மா பாஜகவின் புகழ்பெற்ற பிரமுகராக இருப்பதால் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி என்னையும் எனது குடும்பத்தினரையும் மிரட்டுகிறார்.  இது குறித்து நான் காசிப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.  நான் தலித் என்பதால் இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஏதோ போலிக் காரணங்கள் கூறி வருகின்றனர்.” எனக் கூறி உள்ளார்.