கொரோனா நோயாளிகளுக்கு சேவை செய்த ஈரான் பெண் மருத்துவர் கொரோனாவால் மரணம்

டெகரான்

கொரோனா பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்குச் சேவை செய்த ஈரான் பெண் மருத்துவர் கொரோனாவல் உயிர் இழந்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று ஈரான் நாட்டில் அதிக அளவில் பரவி உள்ளது.

ஈரானைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஷிரின் ரவுகானி ராத் என்பவர் பாதிக்கப்பட்டோருக்கு இரவு பகல் பாராமல் சேவை செய்து வந்தார்.

இவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஆயினும் அவர் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதைக் கைவிடவில்லை.

தன்னிடம் இருந்து கொரோனா  பரவாமல் இருக்கத் தேவையான முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்புடன் சிகிச்சை அளிப்பதை அவர் தொடர்ந்தார்.

தனது இறுதி நாள் வரை சேவை செய்து வந்த மருத்துவர் நேற்று மரணம் அடைந்துள்ளார்.

அவருக்கு உலகெங்கும் உள்ள மக்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.