பேராசிரியையின் வக்கிர பேச்சு: கருப்பு ஆடுகள் களையெடுக்கப்படும்! அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை:

ருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா கல்லூரி மாணவிகளை விபச்சாரத்துக்கு அழைத்த ஆடியோ பேச்சு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இதுபோன்ற கருப்பு ஆடுகள் களையெடுக்கப்படும் என்று கூறினார்.

 

விருதுநகர் மாவட்டம் அருகே அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி. கல்லூரியில் படிக்கும்  மாணவிளிடம், அதிக அளவில் மதிப்பெண்கள் கிடைக்கும் என்றும், ஏராளமான பணம் கிடைக்கும் என்றும் ஆசைக்காட்டி  விபசாரத்திற்கு  அழைப்பு விடுத்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

இதையடுத்து, அந்த பேராசிரியையை  15 நாள் சஸ்பெண்டு செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர்,  பேராசிரியையின் பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இதுபோன்ற கருப்பு ஆடுகள் களையெடுக்கப்படும்  என்றும் கூறினார். மேலும், இந்த விஷயத்தில் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.