நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. த்ரில்லர் கதையை மையமாக கொண்டுள்ள படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.

airaa

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என்றழைக்கப்படும் நயன்தாரா தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கிறார். தொடர்ந்து பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில், இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகிய கோலமாவு கோகிலா மற்றும் இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்கள் மாஸ் ஹிட் கொடுத்துள்ளன.

இந்நிலையில், மா மற்றும் லட்சுமி ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜூன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் விறுவிறுப்பாக நயன்தாரா நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

ஹரர் த்ரில்லர் கதையை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் நயன்தாரா முன்னணி ரோலில் நடித்து வருகிறார். கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இதற்கு முன்னதாக அறம் மற்றும் குலேபகாவலி ஆகிய படங்களை இந்நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கண்களில் கவலையுடன் பார்க்கும் காட்சி வெளியாகியுள்ளது. படத்தின் பெயர் “ ஐரா “ என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கார்ட்டூன் கேலரி