‘பிக் பாஸ் 3’ல் நான் கலந்து கொள்ள போவதாக வந்த செய்தி பொய் : லைலா

‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில் தான் கலந்துகொள்வதாக வெளியான செய்தி வெறும் வதந்தி எனத் தெரிவித்துள்ளார் லைலா.

விஜய் தொலைக்காட்சியில் அடுத்த மாதம் ஒளிபரப்பாகவுள்ள ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில், லைலா கலந்து கொள்கிறார் என வெளியாகின செய்தியை மறுத்துள்ளார் லைலா . இந்த நிகழ்ச்சியை, இம்முறையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்.

நடிகை சாந்தினி தமிழரசன், நடிகர் மற்றும் ஆர்.ஜே.வான ரமேஷ் திலக் ஆகியோர் ‘பிக் பாஸ் 3’-ல் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது. ரமேஷ் திலக் அந்தச் செய்தியை மறுக்க, சாந்தினி மட்டும் ‘பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி