என்னிடம் இருந்து தப்பிய ஒரே நடிகர் விஜய் மட்டும் தான் : லைலா

லைலா, சமூக வலைதளங்கள், டிவி நிகழ்ச்சிகள் என எதிலும் அதிகம் தலை காட்டாது இருந்து வரும் நிலையில் தற்போது விஜயுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இது என்ன படம் என கேள்வியும் எழுப்பியுள்ளார். மேலும் அந்த பதிவில் என்னிடம் இருந்து தப்பித்த ஒரே நடிகர் விஜய் தான் என்றும் பதிவிட்டுள்ளார்.

அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிடோருடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் லைலா இதுவரை விஜயுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. ஆனால் லைலாவின் புகைப்படத்தை வைத்து உன்னை நினைத்து என கூறி வருகின்றனர். அது சரியான பதிலும் கூட .

சூர்யா, லைலா, சினேகா நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான படம் உன்னை நினைத்து. இந்தப் படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானது நடிகர் விஜய் தான். சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போக சூர்யா நடிப்பில் உருவானது இந்தப்படம்.

கார்ட்டூன் கேலரி