ஏரி ஆக்கிரமிப்பு: காஞ்சி ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா செய்த மூதாட்டி

காஞ்சிபுரம்,

மிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இன்று காலை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இன்றைய கூட்டத்துக்கு வயது முதிர்ந்த பெண்மணி கலாதேவி என்பவர்  தனது உடம்பில் தேசிய கொடியை போர்க்கொண்டு வந்திருந்தார்.

அவர் திடீரென  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதை அறிந்த ஆட்சியர் பொன்னையா அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டார்.

அப்போது அந்த பெண்மணி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பலர்  ஏரியை ஆக்கிரமித்து வீடு கட்டி வருகிறார்கள். ஏரியில்  அடுக்குமாடி கட்டிடம்  கட்டி வரும்  தனியாரை தடுக்க கோரியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறினார்.

இது குறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் பொன்னையா கூறினார்.